மாருதி சுஸுகி நிறுவனம் 2.5 கோடி உற்பத்தியை கடந்தது - ஹரியானாவில் புதிய ஆலை அமைக்க திட்டம்

November 3, 2022

இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான மாருதி சுஸுகி, 2.5 கோடி யூனிட்டுகளுக்கு மேல் உற்பத்தியை எட்டியதாக அறிவித்தது. மாருதி சுஸுகியின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிசாஷி டேகுச்சி ஒரு அறிக்கையில், “கடந்த 40 ஆண்டுகளாக இந்திய மக்களுடன் சுஸுகி கூட்டுறவு கொண்டுள்ளது. இந்த ஆண்டு மாருதி சுஸுகி 2.5 கோடி யூனிட்டுகளுக்கு மேல் உற்பத்தியை தாண்டியது. இந்திய மக்களுடனான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் கூட்டாண்மைக்கு ஒரு சான்றாகும். 1983 இல் தனது செயல்பாடுகளைத் தொடங்கிய […]

இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான மாருதி சுஸுகி, 2.5 கோடி யூனிட்டுகளுக்கு மேல் உற்பத்தியை எட்டியதாக அறிவித்தது.

மாருதி சுஸுகியின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிசாஷி டேகுச்சி ஒரு அறிக்கையில், “கடந்த 40 ஆண்டுகளாக இந்திய மக்களுடன் சுஸுகி கூட்டுறவு கொண்டுள்ளது. இந்த ஆண்டு மாருதி சுஸுகி 2.5 கோடி யூனிட்டுகளுக்கு மேல் உற்பத்தியை தாண்டியது. இந்திய மக்களுடனான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் கூட்டாண்மைக்கு ஒரு சான்றாகும்.

1983 இல் தனது செயல்பாடுகளைத் தொடங்கிய மாருதி சுஸுகி, மார்ச் 1994 இல் 10 லட்சம் உற்பத்தியைத் தாண்டியது. மேலும் இந்த நிறுவனமானது மார்ச் 2011 இல் 1 கோடியையும், ஜூலை 2018 இல் 2 கோடி மைல்கல்லையும் தொட்டது. நிறுவனத்தின் முதல் உற்பத்தி நிலையம் ஹரியானாவின் குருகிராமில் அமைக்கப்பட்டது. ஆனால், இப்போது ஹரியானாவில் உள்ள மனேசரிலும் உற்பத்தி ஆலை கொண்டுள்ளது. அது ஆண்டுக்கு 15 லட்சம் யூனிட் உற்பத்தி திறன் கொண்டதாகும்.

இந்நிலையில், ஹரியானாவின் கார்கோடாவில் ஒரு புதிய உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் உள்நாட்டு சந்தையில் 16 பயணிகள் வாகன மாடல்களை விற்பனை செய்து, சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இவ்வாறு டேகுச்சி கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu