சீட் பெல்ட் குறைபாடுகளுக்காக 11177 கிராண்ட் வித்தாரா வாகனங்களை திரும்பப் பெறும் மாருதி

January 24, 2023

சீட் பெல்ட் வடிவமைப்பில் ஏற்பட்ட குறைபாடுகளுக்காக சுமார் 11177 கிராண்ட் வித்தாரா வாகனங்களை திரும்ப பெறுவதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. தற்போதைய நிலையில், இந்த சீட் பெல்ட் குறைபாடுகள் காரணமாக, நீண்ட கால அடிப்படையில் சீட் பெல்ட்களில் தொய்வு ஏற்படலாம் என்று கருதுவதாக மாருதி தெரிவித்துள்ளது. அதனை சீர் செய்யவே வாகனங்கள் திரும்பப் பெறப்படுவதாகவும் கூறியுள்ளது. கடந்த வாரம், ஆல்டோ கே10, எஸ்பிரஸ்சோ, ஈகோ, பிரீஸா, பலேனோ, கிராண்ட் வித்தாரா மாடல்களில் சுமார் 17362 வாகனங்களை மாருதி […]

சீட் பெல்ட் வடிவமைப்பில் ஏற்பட்ட குறைபாடுகளுக்காக சுமார் 11177 கிராண்ட் வித்தாரா வாகனங்களை திரும்ப பெறுவதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. தற்போதைய நிலையில், இந்த சீட் பெல்ட் குறைபாடுகள் காரணமாக, நீண்ட கால அடிப்படையில் சீட் பெல்ட்களில் தொய்வு ஏற்படலாம் என்று கருதுவதாக மாருதி தெரிவித்துள்ளது. அதனை சீர் செய்யவே வாகனங்கள் திரும்பப் பெறப்படுவதாகவும் கூறியுள்ளது.

கடந்த வாரம், ஆல்டோ கே10, எஸ்பிரஸ்சோ, ஈகோ, பிரீஸா, பலேனோ, கிராண்ட் வித்தாரா மாடல்களில் சுமார் 17362 வாகனங்களை மாருதி திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து, ஒரே வாரத்தில் தற்போதைய அறிவிப்பு வெளிவந்துள்ளது கவனிக்கத்தக்கது. தொடர்ச்சியாக, மாருதி நிறுவன கார்களில் உற்பத்தி குறைபாடுகள் ஏற்பட்டு, அவற்றை திரும்ப பெறுவது வாடிக்கையாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாருதி தரப்பிலிருந்து, உற்பத்தி குறைபாடுகள் சீர் செய்யப்படுவதுடன், வாடிக்கையாளருக்கு பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu