பிரீசா சிஎன்ஜி வாகனம் - மாருதி சுசுகி புதிய வெளியீடு

March 18, 2023

மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ்யூவி ரக வாகனமாக பிரீசா அறியப்படுகிறது. இது அதிகம் விற்பனையாகும் நிறுவனத்தின் வாகனங்களில் ஒன்றாகும். இந்நிலையில், இந்த வாகனத்தின் சிஎன்ஜி ரகம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 9.14 முதல் 12.05 லட்சம் வரை சொல்லப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 25.51 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மாருதி சுசுகி இந்தியா பிரிவின் மூத்த அதிகாரி ஸஷாங்க் ஸ்ரீவத்சவா, “பிரீசா வாகனம் தொடர்ந்து […]

மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ்யூவி ரக வாகனமாக பிரீசா அறியப்படுகிறது. இது அதிகம் விற்பனையாகும் நிறுவனத்தின் வாகனங்களில் ஒன்றாகும். இந்நிலையில், இந்த வாகனத்தின் சிஎன்ஜி ரகம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 9.14 முதல் 12.05 லட்சம் வரை சொல்லப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 25.51 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மாருதி சுசுகி இந்தியா பிரிவின் மூத்த அதிகாரி ஸஷாங்க் ஸ்ரீவத்சவா, “பிரீசா வாகனம் தொடர்ந்து விற்பனையில் சாதனை புரிந்து வருகிறது. இந்நிலையில், இதன் சிஎன்ஜி வெர்ஷனும் விற்பனையில் சாதனை புரியும் என்று நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார். மேலும், மாருதி சுசுகியின் சிஎன்ஜி வாகன விற்பனை, நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனையில் 24% ஆக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, எர்டிகா சிஎன்ஜி 57% மற்றும் வேகன் ஆர் சிஎன்ஜி 41% விற்பனையை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu