இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி, ஜனவரி மாதத்தில், கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
பணவீக்கத்தின் காரணமாக மாருதி சுசுகி நிறுவனத்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்த விலையேற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கார்களின் மாடலைப் பொறுத்து விலை உயர்வு விகிதம் மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுமானவரையில் வாகன விலையை உயர்த்தாமல் இருக்க நிறுவனம் முயற்சித்ததாகவும், தற்போது வேறு வழி இன்றி வாகன விலை உயர்த்தப்படுவதாகவும் மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. ஆனால், வாகன விலை உயர்வு எவ்வளவு ரூபாய் வரை இருக்கும் என்ற விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.