மாருதி சுசுகி நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனை அறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி, வருடாந்திர அடிப்படையில், மாருதி சுசுகி வாகனங்களின் மொத்த விற்பனை 5% உயர்ந்து, 172321 என்ற எண்ணிகையில் பதிவாகியுள்ளது. அதே வேளையில், ஏற்றுமதி 28% சரிந்து, 17207 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. மேலும், பங்குச்சந்தை அமைப்பில் சமர்ப்பித்த அறிக்கை படி, உள்நாட்டு மொத்த விற்பனை 11% உயர்ந்து, 155114 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளராக, மாருதி சுசுகி நிறுவனம் தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும், மற்ற வாகன நிறுவனங்களை விட மாருதி நிறுவனம் அதிக எண்ணிக்கையில் வாகன விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.