மாருதி சுசுகி நிறுவனத்தின் பங்குகள் என்று 6% அளவுக்கு உயர்வடைந்துள்ளது. நிஃப்டி பட்டியலில் ஏற்றம் பெற்றுள்ள முதன்மை நிறுவனமாக மாருதி உள்ளது.
உத்திரபிரதேச மாநில அரசு, ஹைப்ரிட் வாகனங்களுக்கான வரி பதிவு கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் உத்திர பிரதேச மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு 3.5 லட்சம் அளவுக்கு நன்மை கிடைக்கும். ஹைப்ரிட் வாகனங்களை தயாரிக்கும் மாருதி சுசுகி, டொயோட்டா, ஹோண்டா போன்ற நிறுவனங்களுக்கும் லாபகரமாக இருக்கும். இந்த அறிவிப்பு வெளியானதோடு, மாருதி சுசுகி நிறுவனம் வாரன்டி சேவைகளை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இந்த இரண்டு செய்திகளின் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில் மாருதி சுசுகி பங்குகள் ஏற்றம் பெற்றுள்ளது.