பயணிகள் வாகன ஏற்றுமதிக்காக, சென்னை காமராஜர் துறைமுகத்துடன் 5 ஆண்டுகால ஒப்பந்தம் - மாருதி சுசுகி

December 23, 2022

மாருதி சுசுகி நிறுவனம், தனது பயணிகள் வாகன ஏற்றுமதிக்காக சென்னையின் காமராஜர் துறைமுகத்துடன் 5 ஆண்டு கால ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா, ஏசியன் பகுதிகள், ஓசானியா மற்றும் சார்க் பகுதிகளுக்கு, காமராஜர் துறைமுகம் வாயிலாக நிறுவனத்தின் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படும். காமராஜர் துறைமுகத்தில், வருடத்திற்கு 20,000 கார்களை ஏற்றுமதி செய்யும் வகையில் பிரத்தியேக அமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மாருதி […]

மாருதி சுசுகி நிறுவனம், தனது பயணிகள் வாகன ஏற்றுமதிக்காக சென்னையின் காமராஜர் துறைமுகத்துடன் 5 ஆண்டு கால ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா, ஏசியன் பகுதிகள், ஓசானியா மற்றும் சார்க் பகுதிகளுக்கு, காமராஜர் துறைமுகம் வாயிலாக நிறுவனத்தின் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படும்.

காமராஜர் துறைமுகத்தில், வருடத்திற்கு 20,000 கார்களை ஏற்றுமதி செய்யும் வகையில் பிரத்தியேக அமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹிசாஷி தகூச்சி, “இந்த ஒப்பந்தத்தின் மூலம், மும்பை, முந்த்ரா, பிபவா துறைமுகங்களில், மாருதி வாகனங்கள் ஏற்றுமதிக்காக காத்திருப்பது குறையும்” என்று கூறியுள்ளார். காமராஜர் துறைமுகத்தின் தலைமை நிர்வாகி சுனில் பலிவால், “இந்தியாவின் முக்கிய கார் ஏற்றமதியாளரான மாருதி சுசுகியுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதால், துறைமுகச் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu