குஜராத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆலை அமைந்துள்ள ஹன்சால்பூர் பகுதியில், ரயில்வே திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். மத்திய அரசின் பிரதம மந்திரி, காடி சக்தி திட்டத்தின் கீழ் இது தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 976 கோடி ரூபாய் மதிப்பில், மாருதி சுசுகி, இந்தியன் ரயில்வே மற்றும் இந்திய அரசு ஆகியவற்றின் கூட்டணியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 105 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கட்டமைப்பை மாருதி சுசுகி நிறுவனம் எடுத்துக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி, மாருதி சுசுகி நிறுவனம் தயாரிக்கும் கார்கள் இனிமேல் ரயில் மூலமாக நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே மூலமாக கொண்டு செல்லப்படும் கார்களின் விகிதத்தை 26% ல் இருந்து 40% ஆக உயர்த்த மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு 50000 லாரிகள் பயன்பாடு குறைக்கப்படுவதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.