உலகளவில் 1 கோடி உற்பத்தி இலக்கை குறுகிய காலத்தில் எட்டி மாருதி சுசுகி சாதனை

October 21, 2024

மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்டின் மானேசர் ஆலை ஒரு கோடி வாகனங்களை உற்பத்தி செய்து பெரும் சாதனை படைத்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலை, வெறும் 18 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. இது சுசுகியின் உலகளாவிய உற்பத்தி ஆலைகளில் மிக விரைவாக ஒரு கோடி வாகனங்களை உற்பத்தி செய்த ஆலையாகும். மாருதி சுசுகியின் மானேசர் ஆலையில் எர்டிகா, எக்ஸ்எல்6, சியாஸ், டிசையர், வேகன் ஆர் உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. […]

மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்டின் மானேசர் ஆலை ஒரு கோடி வாகனங்களை உற்பத்தி செய்து பெரும் சாதனை படைத்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலை, வெறும் 18 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. இது சுசுகியின் உலகளாவிய உற்பத்தி ஆலைகளில் மிக விரைவாக ஒரு கோடி வாகனங்களை உற்பத்தி செய்த ஆலையாகும்.

மாருதி சுசுகியின் மானேசர் ஆலையில் எர்டிகா, எக்ஸ்எல்6, சியாஸ், டிசையர், வேகன் ஆர் உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியா மட்டுமல்லாமல், லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளுக்கும் இங்கிருந்து கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாருதி சுசுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹிசாஷி டேகுச்சி, இந்த சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் வாகனத் துறையின் வளர்ச்சிக்கு இந்த ஆலை பெரும் பங்களிப்பு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu