கராச்சி விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு - 2 சீனர்கள் பலி

October 8, 2024

பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே நடைபெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் நடந்தது. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள டேங்கர் வெடித்ததன் காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் நடந்தது. கொல்லப்பட்ட இருவரும் சீனர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என சீன வெளியுறவுத்துறை கண்டனம் செய்துள்ளது. உள்ளாட்சி அமைச்சர் சியா உல் ஹசன், இது வெளிநாட்டினரைக் […]

பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே நடைபெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் நடந்தது. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள டேங்கர் வெடித்ததன் காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் நடந்தது. கொல்லப்பட்ட இருவரும் சீனர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என சீன வெளியுறவுத்துறை கண்டனம் செய்துள்ளது. உள்ளாட்சி அமைச்சர் சியா உல் ஹசன், இது வெளிநாட்டினரைக் குறிவைக்கும் தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ளார். சம்பவ இடத்தில் கார்கள் எரிந்து, புகை எழும்புவது போன்ற விடியோக்கள் வெளியாகியுள்ளன. காவல்துறையினர் குண்டுவெடிப்பின் நோக்கம் மற்றும் காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu