தைவானின் தாய்சங் நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் கட்டிடத்தில் தீப்பற்றியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
தைவானின் தாய்சங் நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டின் உணவு பதப்படுத்தும் பிரிவுக்கான புதிய கட்டிடத்தில் தீப்பற்றியது. 5 தளங்களைக் கொண்ட கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீ தீவிரமாக பரவி எரிந்தது. இதில், வேலை செய்துகொண்டிருந்தவர்கள் அலறியபடி வெளியேறினர். சிலர் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சிக்கியவர்களை மீட்டு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். தீப்பற்றிய பகுதி அருகில் அதிக அளவு பஞ்சு பேனல்கள் இருந்ததால், தீ வேகமாக பரவியது என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.