மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் தருண், பிரியான்ஷு ரஜாவை வெற்றி கொண்டு காலிறுதிக்கு முன்னேறினார்.
கவுகாத்தியில் நடைபெறும் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் தருண் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றில் போட்டியிட்டார். அவர் சக வீரர் பிரியான்ஷு ரஜாவத்துடன் மோதினார். 24-22, 15-21, 21-13 என்ற புள்ளிக்கணக்கில் தருண் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் 1 மணி நேரம் 10 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.














