ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் 2011-ல் அறிமுகமான மேத்யூ வேட் 36 டெஸ்ட், 97 ஒருநாள், 92 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் கடைசியாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடினார். ஓய்வு குறித்து மேத்யூ வேட் கூறியதாவது: "கடந்த டி20 உலகக் கோப்பையின் முடிவில், சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான எனது நாட்கள் முடிந்துவிட்டதாக நான் உணர்கிறேன். என் ஓய்வு மற்றும் பயிற்சியாளர் பதவிக்கான ஆலோசனைகளை கடந்த ஆறு மாதங்களாக ஜார்ஜ் பெய்லி மற்றும் ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோருடன் செய்து வந்தேன்." மேலும் அவர் பிக்பாஷ் உள்ளிட்ட பிரான்சிஸ் லீக் போட்டிகளில் விளையாடும் திட்டம் உள்ளது என தெரிவித்துள்ளார். அதேபோல் மேத்யூ வேட் ஆஸ்திரேலிய அணியின் கோச்சிங் ஸ்டாஃப் ஆக பணியாற்ற இருக்கிறார்.