மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனை தமிழ்நாட்டில் 100 கண் சிகிச்சை மையங்களை அமைக்கவிருக்கிறது. இதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேக்ஸ் விஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை தமிழ்நாடு, தெலுங்கானா, குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 42 பல்நோக்கு சிறப்பு கண் மருத்துவ மையகளை அமைத்துள்ளது
இது தரமான கண் சிகிச்சை எளிதாகவும் குறைந்த கட்டணத்திலும் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் 100 கண் சிகிச்சை மையங்களை நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் அமைக்கப்பட இருக்கின்றன. இதில் சுமார் 400 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட இருக்கின்றனர். மேலும் 2000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அமைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்துவதாகவும் தமிழ்நாடு அரசுக்கும் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர்கள் முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பதம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் மேக்ஸ் விஷன் நிறுவனத்தின் தலைமை மருத்துவர், தலைமைச் செயலாளர், மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.














