மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் 6 மாத வீழ்ச்சி

June 12, 2023

கடந்த மே மாதத்தில், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் 6 மாத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. “ஒட்டு மொத்தமாக, கடந்த மே மாதத்தில், 3240 கோடி மதிப்பில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 6 மாதங்களில் பதிவாகும் மிகக் குறைந்த முதலீடு ஆகும்” என்று மியூச்சுவல் ஃபண்ட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், 6480 கோடி மற்றும் மார்ச் மாதத்தில் 20534 கோடி அளவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பதிவாகி இருந்தது […]

கடந்த மே மாதத்தில், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் 6 மாத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. “ஒட்டு மொத்தமாக, கடந்த மே மாதத்தில், 3240 கோடி மதிப்பில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 6 மாதங்களில் பதிவாகும் மிகக் குறைந்த முதலீடு ஆகும்” என்று மியூச்சுவல் ஃபண்ட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், 6480 கோடி மற்றும் மார்ச் மாதத்தில் 20534 கோடி அளவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பன்மடங்கு சரிவை சந்தித்துள்ளது.

பங்குகள் சார்ந்த மற்றும் சாராத வகையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக, அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களையும் பொறுத்தவரை, கடந்த மே மாதத்தில் 57420 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 1.24 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் 46,000 கோடி முதலீடுகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஏப்ரலில் 1.06 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu