உலக அளவில் பிரபலமான கன்சல்டிங் நிறுவனமாக மெக்கன்சி உள்ளது. இந்த நிறுவனம் 360 பேரை பணியில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 3% ஆகும். நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பகுதியாக இந்த பணி நீக்கம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்சல்டிங் துறையில் மெக்கன்ஸி நிறுவனம் முன்னணியில் உள்ளது. ஆனால், கொரோனா பரவலுக்கு பிறகு கன்சல்டிங் துறை வீழ்ச்சி அடைந்து வரும் காரணத்தால், மெக்கன்சி நிறுவனத்தில் பல்வேறு மாறுதல்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. அதன்படி, நிறுவனத்தின் வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கன்சல்டிங் துறையில் ஈடுபட்டு வரும் வேறு பல நிறுவனங்களும் பணி நீக்கங்களை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.