மும்பையில் தட்டம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தட்டம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவுவதை கட்டுப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக குடிசை பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மும்பையில் புதிதாக 11 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது. தட்டமைக்கு மேலும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் மும்பை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தட்டம்மை நோய் தொற்றை கட்டுப்படுத்த 9 மாதம் முதல் 5 வயது வரை உள்ள 1 லட்சத்து 34 ஆயிரத்து 833 குழந்தைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.