இந்திய அரசின் இணைய வர்த்தகத் தளமான ஓஎன்டிசி-ல் (ONDC), மீஷோ (Meesho) நிறுவனம் புதிதாக இணைந்துள்ளது. ஏற்கனவே, பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்துள்ள நிலையில், மீஷோவின் இணைப்பு வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போதைய நிலையில், பெங்களூரு நகரில் மட்டும் ஓஎன்டிசி இணைய சேவை இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்தியாவின் பிற பகுதிகளிலும் செயல்பாடுகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்தது குறித்து பேசிய மீஷோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விதித் ஆத்ரேயா, “இந்திய மக்கள் அனைவருக்கும் இணைய வர்த்தகம் சென்றடையும் வகையில் ஓஎன்டிசி செயல்படுகிறது. அதோடு இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இதன் மூலம் அதிகப்படியான உள்நாட்டு வாடிக்கையாளர்களை எளிதில் சென்றடைய முடியும் என நம்புகிறோம்” என்று கூறினார்.