வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இது வடக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் நகர்ந்தது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதற்கு பின்னர் வலுவடைந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் நகர்ந்தது. இந்த குறைந்த காற்றழுத்தம் தொடர்ந்து வலுப்பெற்று புயல் சின்னமாக மாறி ஆந்திர கடலோர பகுதிகளில் நேற்று நிலை கொண்டிருந்தது. பின்னர் இந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உரு பெற்று விசாகப்பட்டினத்தில் இருந்து 420 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கே நிலை கொண்டிருந்தது. ஒடிசா கடல் பக்கம் நிலை கொண்டிருந்த நிலையில் இந்த புயலுக்கு மிதிலை என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையை ஒட்டி வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை 6 நாட்கள் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.