தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இன்று மெகா மருத்துவ முகாம்

தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி, தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 24) 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.  சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்கள் உள்ளன. ஏற்கெனவே 5 மண்டலங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள மண்டலங்களில் மண்டலத்துக்கு ஓர் இடம் […]

தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி, தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 24) 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.  சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்கள் உள்ளன. ஏற்கெனவே 5 மண்டலங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள மண்டலங்களில் மண்டலத்துக்கு ஓர் இடம் வீதம் 10 இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் 90 இடங்களிலும் ஒரே நாளில் 100 மருத்துவ முகாம்கள் நடக்கின்றன.

காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களில் பங்கேற்பவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து அட்டைகள் வழங்கப்படும். ஒவ்வொரு முகாமிலும் சுமார் 1,000 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu