சென்னை மாநகராட்சி, தெரு நாய்களில் ரேபிஸ் தடுப்பை வலுப்படுத்தும் முகமாக, ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் மெகா தடுப்பூசி முகாமை தொடங்குகிறது. 50 நாட்களில் 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த 30 சிறப்பு கால்நடை மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தெருக்களில், தினமும் 3,000 நாய்களுக்கு நேரடியாக தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி பெற்ற நாய்களுக்கு அடையாள மை வைக்கப்படும். முன்னதாக நாய்களை பிடித்து கருத்தடை மையங்களில் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை இருந்தது.இம்முறை, துரிதமாக பரவக்கூடிய ரேபிஸ் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், நேரடி தளத்தில் செயல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்கள் மற்றும் செல்லப்பிராணி பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.