பிரதமர் மோடி பிரசாரத்திற்கு மேகாலயா அரசு தடை விதித்துள்ளது.
மேகாலயாவில் வரும் 27 ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளும் தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இறுதிக்கட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
வெஸ்ட் ஹோரா ஹில்ஸ் மாவட்டம் டூராவில் உள்ள பி.ஏ.சங்மா ஸ்டேடியத்தில் பிரதமர் மோடி பிரசார கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட பா.ஜ., அனுமதி கோரி விளையாட்டு துறை இயக்குனரிடம் கடிதம் வழங்கப்பட்டது. இதனை பரிசீலித்த இயக்குனரகம் இங்கு பிரசார கூட்டம் நடத்துவது விரும்பத்தக்கதல்ல என்று பதில் அளித்து அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.