சென்னையில் கடும் குளிர் - ட்விட்டரில் டிரெண்டாகும் 'சென்னை ஸ்னோ' ஹாஷ்டேக்

November 23, 2022

நவம்பர் 21ஆம் தேதி, சென்னையின் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்தது. சென்னையின் வெப்பநிலை அளவை பொறுத்தவரை, இது மிக மிக குறைந்த அளவாகும். வங்கக் கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததால், வெப்பநிலை இவ்வாறு குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார். எப்போதுமே வெப்பமாக இருக்கும் சென்னையில், கடும் குளிர் நிலவியதால், இணையவாசிகள் ‘சென்னை ஸ்னோ’ […]

நவம்பர் 21ஆம் தேதி, சென்னையின் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்தது. சென்னையின் வெப்பநிலை அளவை பொறுத்தவரை, இது மிக மிக குறைந்த அளவாகும். வங்கக் கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததால், வெப்பநிலை இவ்வாறு குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

எப்போதுமே வெப்பமாக இருக்கும் சென்னையில், கடும் குளிர் நிலவியதால், இணையவாசிகள் ‘சென்னை ஸ்னோ’ என்ற பெயரில் ஹாஷ்டேக் ஒன்றை ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தனர். அது மட்டுமல்லாது, சென்னையின் பல்வேறு இடங்களை பனி சூழ்ந்தது போன்ற வேடிக்கையான புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்தனர். இது இணையத்தில் வேகமாக பரவியது. சென்னை சூப்பர் கிங்ஸ் கணக்கில் இந்த ஹாஷ்டேக் பகிரப்பட்டதும், இது பேசு பொருளாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu