இந்தியாவில் பொது போக்குவரத்து அதிகம் பயன்படுத்தும் ஆண்கள் பெண்கள் குறித்து உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் நகரவாசிகளின் இயக்கம் மற்றும் பொதுவெளிகள் என்ற பெயரில் ஆண்கள் மற்றும் பெண்களின் பேருந்து, ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து பயணம் பற்றி ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் உலக வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. 2004-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மும்பை நகரில் 6,048 பேரிடம் உலக வங்கி சார்பிலான ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், வேலைக்கு செல்லும் ஆண்கள் இரண்டு சக்கர வாகனங்களுக்கும், பெண்கள் ஆட்டோ அல்லது வாடகை கார்களான டாக்சிகளுக்கும் மாறி விட்டனர் என தெரிய வந்தது. எனினும், டாக்சிகளின் கட்டணம் ஒப்பீட்டு அளவில் சற்று அதிகம். இதனால், ஒரு சிலரை தவிர பெருமளவிலான பெண்கள் பேருந்துகளின் உதவியுடனேயே தங்களது வேலைக்கான பயணம் மேற்கொள்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.