இந்த பண்டிகை காலத்தில், சொகுசு கார்களான மெர்சிடஸ், ஆடி விற்பனையில் வரலாற்று உச்சம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், உயர் ரக கார்களுக்கு தொடர்ந்து தேவை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, வாகன விற்பனை உயர்ந்து வரும் நடப்பாண்டில், சொகுசு கார் விற்பனையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், ஓணம் பண்டிகை முதல் தீபாவளி பண்டிகை வரையிலான இந்தியாவின் முக்கிய பண்டிகை காலத்தில், மெர்சிடஸ் பென்ஸ், ஆடி, லம்போர்கினி போன்ற சொகுசு கார் விற்பனை வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, டெல்லி மற்றும் மும்பை பகுதிகளில் அதிக கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது தவிர, ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, பெங்களூர், அகமதாபாத் ஆகிய பகுதிகளிலும் விற்பனை அதிகரித்துள்ளது. இதுகுறித்து பேசிய சொகுசு கார் நிறுவன அதிகாரிகள், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் ‘சொகுசு கார் சந்தை’யாக உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.