பிரபல சொகுசு கார் உற்பத்தியாளரான மெர்சிடஸ் பென்ஸ், தனது கார்களின் விலைகளை 2 முதல் 12 லட்சம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய விலைகள் செயலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம், வாகனங்களின் எக்ஸ் ஷோரூம் விலையில் 5% உயர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி செலவுகள் அதிகரித்தது, அந்நியச் செலாவணி பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த விலை ஏற்றம் அறிவிக்கப்படுவதாக மெர்சிடஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. மூன்றே மாதங்களில், இந்த நிறுவனம் 2வது முறையாக விலைகளை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏ கிளாஸ் லிமோசின் மாடலில் 2 லட்சம் வரை விலை ஏற்றம் செய்யப்படும். ஜி எல் ஏ எஸ்யூவி -ல் 7 லட்சமும், மெர்சிடஸ் மேபேட்ச் உயர் ரக வாகனங்களில் 12 லட்சம் வரையும் விலை ஏற்றம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.