2023ல், 10 புதிய வாகனங்கள் - மெர்சிடஸ் பென்ஸ் அறிவிப்பு

January 7, 2023

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் உற்பத்தியாளரான மெர்சிடிஸ் பென்ஸ், 2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் 10 புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ஒரு கோடி ரூபாய் அளவில் விலையுடைய கார்கள் அறிமுகமாகும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில், இதே விலையுடைய பென்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை 69% உயர்வை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022 ஆம் ஆண்டில், மொத்தமாக 15822 மெர்சிடஸ் பென்ஸ் வாகனங்களும், ஒரு கோடி ரூபாய்க்கு […]

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் உற்பத்தியாளரான மெர்சிடிஸ் பென்ஸ், 2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் 10 புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ஒரு கோடி ரூபாய் அளவில் விலையுடைய கார்கள் அறிமுகமாகும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில், இதே விலையுடைய பென்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை 69% உயர்வை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022 ஆம் ஆண்டில், மொத்தமாக 15822 மெர்சிடஸ் பென்ஸ் வாகனங்களும், ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான கார்கள் 3500 என்ற எண்ணிக்கையிலும் விற்பனையாகியுள்ளன. அத்துடன், நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும், 2000 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனவே, ஒரு கோடி விலை மதிப்பில் புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைமை செயல் அதிகாரி சந்தோஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu