2 புதிய வாகனங்களை அறிமுகம் செய்து இரட்டை இலக்க வளர்ச்சியை எதிர்நோக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

August 9, 2024

மெர்சிடீஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம், மெர்சிடீஸ்-AMG GLC 43 4MATIC Coupe மற்றும் CLE 300 Cabriolet AMG லைன் ஆகிய 2 உயர்தர மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம், இந்தியாவில் தனது ஆடம்பர வாகனங்கள் வரிசையை மெர்சிடிஸ் பென்ஸ் விரிவுபடுத்தியுள்ளது. மேலும், வரும் செப்டம்பர் மாதம், மெர்சிடீஸ் மின்சார மேபேக் எஸ்யூவி அறிமுகமாகவுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் ஆடம்பர வாகன சந்தையில் மெர்சிடீஸ்-பென்ஸ் தனது ஆதிக்கத்தை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, மின்சார வாகனங்கள் […]

மெர்சிடீஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம், மெர்சிடீஸ்-AMG GLC 43 4MATIC Coupe மற்றும் CLE 300 Cabriolet AMG லைன் ஆகிய 2 உயர்தர மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம், இந்தியாவில் தனது ஆடம்பர வாகனங்கள் வரிசையை மெர்சிடிஸ் பென்ஸ் விரிவுபடுத்தியுள்ளது. மேலும், வரும் செப்டம்பர் மாதம், மெர்சிடீஸ் மின்சார மேபேக் எஸ்யூவி அறிமுகமாகவுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் ஆடம்பர வாகன சந்தையில் மெர்சிடீஸ்-பென்ஸ் தனது ஆதிக்கத்தை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, மின்சார வாகனங்கள் பிரிவில் வலுவான வாடிக்கையாளர் தேவையை பெற்று, 2024-ஆம் ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை எதிர்நோக்குகிறது. ஏற்கனவே, 2024-ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும், மெர்சிடீஸ்-பென்ஸ் இந்தியாவின் விற்பனை 9% அதிகரித்துள்ளது. குறிப்பாக, உயர் ரக சொகுசு வாகனங்களின் விற்பனை 12% வளர்ச்சியடைந்துள்ளது. எனவே, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மெர்சிடிஸ் பென்ஸ் எட்டும் என்று நம்பப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu