கடந்த அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் உற்பத்தி துறை சார்ந்த ஏற்றுமதி மதிப்பு 33.57 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்த துறையில் உயர்வு பதிவாகியுள்ளது. சர்வதேச அளவில் பொருளாதார சீரற்ற நிலை நிலவி வரும் சூழலில், இது இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளதாக இந்திய வர்த்தகத் துறை செயலாளர் சுனில் பரத்வாள் தெரிவித்துள்ளார். மேலும், உற்பத்தித் துறை சார்ந்த இறக்குமதியும் அக்டோபர் மாதத்தில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பண்டிகைக் காலத்தில் தங்கம், வெள்ளி போன்றவற்றுக்கான தேவை அதிகரித்த காரணத்தால், இறக்குமதி உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில், உற்பத்தி துறை சார்ந்த இறக்குமதி மதிப்பு 65.03 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது.