இன்று நிகழும் 5 கிரகங்களின் அணிவகுப்பு - அரிய வானியல் நிகழ்வு

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி மற்றும் யுரேனஸ் ஆகிய கிரகங்கள் பூமியின் நிலவுடன் சேர்ந்து, இரவு வானில் அணிவகுப்பாக தென்பட உள்ளன. இந்த நிகழ்வு இந்த வாரம் முழுவதும் தெரியும் என்றாலும், இன்று மட்டுமே அதனை தெளிவாக காண முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியன் மறைவுக்குப் பிறகு, மேற்கு வானில், கிரகங்களின் அணிவகுப்பு நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சூரியன் மறைவுக்குப் பிறகு, அரை மணி நேரத்திற்குள்ளாக, புதன் மற்றும் வியாழன் கிரகங்கள் தென்படும். மேலும், […]

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி மற்றும் யுரேனஸ் ஆகிய கிரகங்கள் பூமியின் நிலவுடன் சேர்ந்து, இரவு வானில் அணிவகுப்பாக தென்பட உள்ளன. இந்த நிகழ்வு இந்த வாரம் முழுவதும் தெரியும் என்றாலும், இன்று மட்டுமே அதனை தெளிவாக காண முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியன் மறைவுக்குப் பிறகு, மேற்கு வானில், கிரகங்களின் அணிவகுப்பு நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சூரியன் மறைவுக்குப் பிறகு, அரை மணி நேரத்திற்குள்ளாக, புதன் மற்றும் வியாழன் கிரகங்கள் தென்படும். மேலும், புதன் மற்றும் யுரேனஸ் கிரகங்கள் குறைவான பிரகாசத்துடன் இருப்பதால், அவற்றை காண்பதில் சிரமங்கள் இருக்கலாம். வெள்ளி கிரகம் இருப்பதிலேயே பிரகாசமாக தெரியும். செவ்வாய் கிரகம், நிலவுக்கு அருகில், சிவப்பு நிறத்தில் ஒளிரும். பைனாகுலர்கள் உதவியுடன் இந்த அரிய வானியல் நிகழ்வை தெளிவாக கண்டு களிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu