மெரிடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எம்மா நவாரோ அபார வெற்றி பெற்றார்.
மெக்சிகோவில் நடைபெற்ற மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் எம்மா நவாரோ கொலம்பியாவின் எமிலியானா அரங்கோவை எதிர்த்தார். இந்த போட்டியில் அசத்தும் விளையாட்டினை காண்பித்த எம்மா நவாரோ 6-0, 6-0 என்ற ஸ்கோரில் எளிதில் வெற்றி பெற்றார் மற்றும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.














