மெட்டா நிறுவனம், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் இயங்கும் வாட்ஸ் அப் செயலியை வெளியிட்டுள்ளது. தற்போது, புதிதாக, MacOS தளத்தில் இயங்கும் வாட்ஸ் அப் செயலியை வெளியிட்டுள்ளது. அதன்படி, MacOS இயங்கு தளத்தில் இயங்கும் கணினிகளில் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியும். மேலும், குரூப் கால், ஆடியோ மற்றும் வீடியோ கால் அம்சங்களை இணைத்து MacOS வாட்ஸ் அப் செயலி வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
MacOS தளத்தில் கொண்டு வரப்பட்டுள்ள வாட்ஸ்அப் செயலியில் அதிகபட்சமாக 8 பேர் வீடியோ காலில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதுவே ஆடியோ காலில் 32 பேர் வரை பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது தவிர, தனிநபர் ஒருவர் குருப் காலில் இடையில் இணைவது, சாட்டில் பைல்களை பகிர்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்யும் என்கிரிப்ஷன் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. இது MacOS 11 மற்றும் அதற்கு பிறகு வெளியான இயங்குதளங்களில் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.