விளம்பரம் இல்லா பேஸ்புக் இன்ஸ்டாகிராம் சேவைகளுக்கு கட்டணம் - மெட்டா அறிவிப்பு

October 3, 2023

மெட்டா நிறுவனம், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் விளம்பரம் இல்லாத சேவையை பெற, கட்டண முறையை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விளம்பரம் இல்லா சேவைகளை பெறுவதற்கு, மாதம் 14 டாலர்கள் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 1164 ரூபாய் ஆகும். இது தவிர, கணினிகளில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த, 10 யூரோக்கள் மாத கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் கணக்குகளை இணைத்து பயன்படுத்துவோருக்கு மாதம் 6 யூரோக்கள் கட்டணம் விதிக்கப்படலாம் […]

மெட்டா நிறுவனம், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் விளம்பரம் இல்லாத சேவையை பெற, கட்டண முறையை அறிமுகம் செய்துள்ளது.
மெட்டா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விளம்பரம் இல்லா சேவைகளை பெறுவதற்கு, மாதம் 14 டாலர்கள் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 1164 ரூபாய் ஆகும். இது தவிர, கணினிகளில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த, 10 யூரோக்கள் மாத கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் கணக்குகளை இணைத்து பயன்படுத்துவோருக்கு மாதம் 6 யூரோக்கள் கட்டணம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்த கட்டண முறை அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக, மெட்டா நிறுவனத்திற்கு கிடைத்து வந்த விளம்பர வருவாய் வெகுவாக குறைந்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu