மெட்டா இந்தியாவின் 2022ம் நிதியாண்டுக்கான வரிக்குப் பிந்தைய லாபம் 132% அதிகரிப்பு

October 18, 2022

மெட்டா இந்தியாவின் 22 நிதியாண்டில் வரிக்கு முந்தைய லாபம் ரூ. 440 கோடியாக இருந்தது. இந்நிலையில் வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) ஆண்டுக்கு ஆண்டு 132 சதவீதம் அதிகரித்து தற்போது ரூ.297 கோடியாக உள்ளது என RoC தரவுகள் தெரிவிக்கின்றன. பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை மெட்டாவின் பிரபலமான தளங்கள் ஆகும். இதன் விளம்பர வருவாய்கள் இந்தியாவில் மெட்டாவின் முக்கிய வருவாயாகும். 2021 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தரவுபடி, மெட்டாவானது WhatsApp-ல் 530 […]

மெட்டா இந்தியாவின் 22 நிதியாண்டில் வரிக்கு முந்தைய லாபம் ரூ. 440 கோடியாக இருந்தது. இந்நிலையில் வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) ஆண்டுக்கு ஆண்டு 132 சதவீதம் அதிகரித்து தற்போது ரூ.297 கோடியாக உள்ளது என RoC தரவுகள் தெரிவிக்கின்றன.

பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை மெட்டாவின் பிரபலமான தளங்கள் ஆகும். இதன் விளம்பர வருவாய்கள் இந்தியாவில் மெட்டாவின் முக்கிய வருவாயாகும். 2021 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தரவுபடி, மெட்டாவானது WhatsApp-ல் 530 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. அதுபோல Facebookல் 410 மில்லியன் மற்றும் Instagram ல் 210 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது .இதன்மூலம் நிறுவனம் பெறும் மொத்த விளம்பர வருவாய் 2020-21 நிதியாண்டில் ரூ.9,326 கோடியாக இ௫ந்தது. ஆனால்
2022ம் நிதியாண்டில் மெட்டாவின் மொத்த விளம்பர வருவாய் ரூ.16,189 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது நிறுவனத்தின் லாபம் ஆண்டுக்கு ஆண்டு 74 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

அதிலும் 2022ம் நிதியாண்டில் வரிக்கு முந்தைய லாபம் ரூ. 440 கோடியாக இருந்தநிலையில் 21-22 நிதியாண்டில், Meta India வின் வரிக்கு பிந்தைய லாபம் PAT ரூ. 297 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்படி நிறுவனமானது ஆண்டுக்கு 116 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என RoC தரவுகள் தெரிவிக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu