ஐரோப்பிய மக்களுக்கான விளம்பரம் இல்லா சந்தா திட்டத்தை மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் விளம்பரம் இல்லா சேவை கட்டணத்துடன் வழங்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப இந்த சந்தா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.மாதத்திற்கு 9.99 யூரோக்கள் கட்டணத்தில், விளம்பரம் இல்லாத சேவை வழங்கப்படுகிறது. இதுவே, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை, கைபேசிகளில் விளம்பரம் இன்றி பயன்படுத்த, 12.99 யூரோக்கள் மாத கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில், மெட்டா நிறுவனத்திற்கு எதிராக விளம்பர வர்த்தகம் சார்ந்த சர்ச்சை உள்ளது. இந்த நிலையில், விளம்பரம் இல்லா சந்தா திட்டம் அதிக கட்டணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இலவச சேவையை விரும்புவார்கள் எனவும், எளிதாக சர்ச்சையில் இருந்து விடுபடலாம் எனவும், மெட்டா திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது.