மெட்டா நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் இந்தியாவில் அறிமுகம் ஆகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், வாட்ஸ் அப் தளத்தில் நேரடியாக புகுத்தப்படுவதால், பயனர்களின் குறுஞ்செய்தி அனுபவம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் ஏஐ சேவைகள் ஆங்கில மொழியில் மட்டும் தற்போது கிடைக்கின்றன. இந்தியா உட்பட சில நாடுகளில் மட்டுமே இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் மூலம், உரையாடல்கள், கேள்வி பதில்கள், புகைப்படம் உருவாக்குதல், மொழிபெயர்ப்புகள் மற்றும் ஆலோசனைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், மற்ற வாட்ஸ் அப் உரையாடல்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளது போல, ஏஐ சாட்பாட் உடனான உரையாடல்கள் என்கிரிப்ட் செய்யப்படவில்லை. செயற்கை நுண்ணறிவு திறனை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று மெட்டா தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியின் புதிய வெர்ஷனில் இந்த சேவை கொடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் சாட்டில் காணப்படும் ஊதா நிற வட்டமான ஐகானை பயன்படுத்தி மெட்டா ஏஐ சேவைகளை பயனர்கள் பெறலாம்.