மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம், பிப்ரவரி 12 முதல் 18 வரை 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அதிகபட்சம் 5% குறைந்த செயல்திறன் கொண்ட ஊழியர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து போன்ற நாடுகளின் தொழிலாளர் சட்டங்களால் அந்நிய நாட்டு ஊழியர்கள் பணி நீக்கத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம், பிப்ரவரி 11 முதல் மார்ச் 13 வரை மெட்டா நிறுவனத்தில் இயந்திர கற்றல் பொறியாளர்கள் புதிதாக பணியமர்த்தப்பட உள்ளனர். அமெரிக்காவில் டிசம்பர் மாதம் வேலைவாய்ப்பு 7.60 மில்லியனாக குறைந்துள்ளது. இது பணியிட சந்தையில் மந்த நிலை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.