பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், கடந்த காலாண்டில் 164% லாப உயர்வை பதிவு செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, மெட்டா நிறுவனத்தின் நிகர லாபம் 11.58 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே, முந்தைய ஆண்டில் 4.4 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே காலகட்டத்தில், மெட்டா நிறுவனத்தின் வருவாயில் 23% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், கடந்த காலாண்டு, வர்த்தக ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நிறுவனத்திற்கு மிகவும் சிறப்பானதாக அமைந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, விளம்பர வருவாயில் கணிசமான முன்னேற்றம் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும் உயர்வு காணப்பட்டுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.














