மெட்டா நிறுவனம், நேற்று தனது அடுத்த தலைமுறை லாங்குவேஜ் மாடல் லாமா 2 ஐ வெளியிட்டுள்ளது. இது, ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி மற்றும் கூகுள் நிறுவனத்தின் பார்ட் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தற்போதைய நிலையில், பொதுமக்கள் அனைவருக்கும், இலவச முறையில் லாமா 2 சேவைகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லாமா 1 லாங்குவேஜ் மாடலை விட, லாமா 2 மாடலில் 40% கூடுதல் தரவுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7B, 13B மற்றும் 70B ஆகிய 3 அளவுகளில் லாமா 2 வெளிவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. உரையாடல் அடிப்படையில் லாமா 2 இயங்கும் எனவும், ஒரு மில்லியனுக்கும் கூடுதலான மனித கூற்றுகளுக்கு விடை தரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், லாமா 1மாடலை விட இதன் தரவு நீளம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.