மெட்டா நிறுவனம் தனது ஏஐ சாட்பாட்டில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. ஜூடி டென்ச், கிறிஸ்டன் பெல், ஜான் சீனா போன்ற பிரபலங்களின் குரலை இந்த சாட்பாட்டில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களுக்கு பிடித்த பிரபலங்களின் குரலில் வாய்ஸ் அசிஸ்டெண்டை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வார இறுதியில் அமெரிக்கா உள்ளிட்ட ஆங்கிலம் பேசும் நாடுகளில் இந்த அம்சம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அம்சத்துடன் இணைந்து, மெட்டா நிறுவனத்தின் முதல் ஏஆர் கிளாஸும் அறிமுகமாகும் என தகவல் வெளிவந்துள்ளது. மெட்டா கிளாஸ் அணிந்து ஜான் சீனா நிகழ்த்திய ஸ்டன்ட் புரோமோ காணொலியை மார்க் ஜூக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது இதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.