மெட்டா நிறுவனத்தில் மேலும் 10000 பேர் பணி நீக்கம்

May 25, 2023

செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக, பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், மெட்டா நிறுவனம் ஏற்கனவே 11000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. ஆனால், தற்போது, மீண்டும் 10000 ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த முறை, மெட்டாவின் பணி நீக்கத்தில் இந்தியர்கள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மெட்டா நிறுவனத்தின் தற்போதைய பணி நீக்க நடவடிக்கையில், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக, பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், மெட்டா நிறுவனம் ஏற்கனவே 11000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. ஆனால், தற்போது, மீண்டும் 10000 ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த முறை, மெட்டாவின் பணி நீக்கத்தில் இந்தியர்கள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மெட்டா நிறுவனத்தின் தற்போதைய பணி நீக்க நடவடிக்கையில், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது மெட்டா நிறுவனத்தின் மூன்றாவது மற்றும் இறுதிகட்ட பணி நீக்க நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், மெட்டா நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, ப்ளூம்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில், மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூகர்பெர்க் முதல் 10 இடங்களுக்குள் மீண்டும் இணைந்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu