மெட்டா நிறுவனம், குவெஸ்ட் என்ற பெயரில் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், மெய்நிகர் உலகில், கேமிங் மற்றும் காணொளி உரையாடல்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விர்ச்சுவல் ரியாலிட்டி சேவைகளை சந்தைப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, மெட்டா குவெஸ்ட் பிளஸ் (Meta Quest +) விர்ச்சுவல் ரியாலிட்டி சேவைகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7.99 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவே, வருடாந்திர அடிப்படையில் 59.99 டாலர்கள் சந்தா கட்டணமாக வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இது, தற்போதைய குவெஸ்ட் 2 ஹெட்செட்டுகளுக்கு மட்டுமின்றி, எதிர்காலத்தில் வரவுள்ள குவெஸ்ட் ப்ரோ, குவெஸ்ட் 3 போன்ற விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களுக்கும் புகுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு போட்டியாக, மெட்டா நிறுவனத்தின் ஹெட்செட் கருதப்பட்டு வரும் நிலையில், அதற்கான சந்தா கட்டணம் குறித்த அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.