பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களை இயக்கி வரும் மெட்டா நிறுவனம், கிராஸ் ஆப் மெசேஜிங் அம்சத்தை நிறுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில், கிராஸ் ஆப் மெசேஜிங் அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்தது. அதன்படி, இன்ஸ்டாகிராம் தளத்திலிருந்து பேஸ்புக் மெசஞ்சருக்கு செய்தி பரிமாற முடியும். இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் முதல், இந்த அம்சம் நிறுத்தப்படுவதாக செய்தி வெளிவந்துள்ளது. எனவே, இன்ஸ்டாகிராம் வாயிலாக தங்கள் பேஸ்புக் நண்பர்களுடன் பயனர்கள் உரையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராஸ் ஆப் மெசேஜிங் மூலம் இதுவரை பதிவான சாட் செய்திகள், ‘ரீட் ஒன்லி’ ஆக மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மார்க் ஜூக்கர்பர்க் இன்னும் வெளியிடவில்லை என்பது கவனத்திற்குரியது.