பிரபலங்களைப் போன்ற ஏஐ சாட்பாட் அறிமுகம் செய்ய மெட்டா திட்டம்

தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டு வரும் பல நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சாதனங்களை வடிவமைத்து வருகின்றன. அந்த வகையில், மெட்டா நிறுவனம், பிரபலங்களைப் போன்ற ஏஐ சாட்பாட்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. பெர்சோனாஸ் (Personas) என்று அழைக்கப்படும் இந்த சாட்பாட்கள், ஒரு மனிதருடன் பேசுவது போன்ற உணர்வை தரவல்லவை ஆகும். குறிப்பாக, சாட் பாட் ஒன்று, முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் பாத்திர வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு சாட் பாட், சுற்றுலா தொடர்பான விவரங்களை […]

தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டு வரும் பல நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சாதனங்களை வடிவமைத்து வருகின்றன. அந்த வகையில், மெட்டா நிறுவனம், பிரபலங்களைப் போன்ற ஏஐ சாட்பாட்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

பெர்சோனாஸ் (Personas) என்று அழைக்கப்படும் இந்த சாட்பாட்கள், ஒரு மனிதருடன் பேசுவது போன்ற உணர்வை தரவல்லவை ஆகும். குறிப்பாக, சாட் பாட் ஒன்று, முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் பாத்திர வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு சாட் பாட், சுற்றுலா தொடர்பான விவரங்களை தோழமையுடன் எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்ட வருவதாக கூறப்படுகிறது. இந்த வகை ஏஐ சாட் பாட்கள், வர்த்தக ரீதியான முக்கியத்துவத்தை பெறுவதுடன், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெறும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu