இந்தியாவில் முதல் டேட்டா சென்டரை அமைக்கும் மெட்டா

March 6, 2024

மெட்டா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் டேட்டா சென்டரை அமைக்க உள்ளது. மிக சிறிய அளவில், 10 முதல் 20 மெகாவாட் திறன் கொண்ட டேட்டா சென்டர் அமைக்கப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது. இதற்காக, 500 முதல் 1200 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளது. டேட்டா சென்டரை எந்த பகுதியில் அமைக்கலாம் என்பது குறித்து தற்போது ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் நான்காம் தட்டு நகரங்களில் டேட்டா சென்டர் அமைப்பதற்கு […]

மெட்டா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் டேட்டா சென்டரை அமைக்க உள்ளது.

மிக சிறிய அளவில், 10 முதல் 20 மெகாவாட் திறன் கொண்ட டேட்டா சென்டர் அமைக்கப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது. இதற்காக, 500 முதல் 1200 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளது. டேட்டா சென்டரை எந்த பகுதியில் அமைக்கலாம் என்பது குறித்து தற்போது ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் நான்காம் தட்டு நகரங்களில் டேட்டா சென்டர் அமைப்பதற்கு 50 முதல் 60 கோடி ரூபாய் வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகு, மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் மிகப்பெரிய வெளிச்சத்துக்கு வந்தது. இந்தியாவை பொறுத்தவரை அசுர வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எனவே, இந்த டேட்டா சென்டர் மெட்டா நிறுவனத்திற்கு இன்றியமையாததாக இருக்கும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu