துருக்கியில் திரட்ஸ் சேவையை தற்காலிகமாக நிறுத்த மெட்டா முடிவு

April 16, 2024

துருக்கியில் 2 வார காலத்துக்கு திரட்ஸ் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் எழுத்து பதிவு தளமான திரட்ஸ், இன்ஸ்டாகிராம் செயலியோடு தரவுகளை பகிர்ந்து கொள்கிறது. குறிப்பாக, இன்ஸ்டாகிராம் கணக்கு மூலமாக மட்டுமே திரட்ஸ் செயலியில் உள்நுழைய முடியும். இது துருக்கி நாட்டு விதிமுறைகளின் படி சரியானதல்ல. அதாவது, 2 வெவ்வேறு தளங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நிகழ்வது பாதிப்புகளை ஏற்படுத்தும் என துருக்கி சட்ட திட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பாக […]

துருக்கியில் 2 வார காலத்துக்கு திரட்ஸ் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் எழுத்து பதிவு தளமான திரட்ஸ், இன்ஸ்டாகிராம் செயலியோடு தரவுகளை பகிர்ந்து கொள்கிறது. குறிப்பாக, இன்ஸ்டாகிராம் கணக்கு மூலமாக மட்டுமே திரட்ஸ் செயலியில் உள்நுழைய முடியும். இது துருக்கி நாட்டு விதிமுறைகளின் படி சரியானதல்ல. அதாவது, 2 வெவ்வேறு தளங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நிகழ்வது பாதிப்புகளை ஏற்படுத்தும் என துருக்கி சட்ட திட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பாக மெட்டா அளித்த விளக்கங்கள் துருக்கியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆகவே, வரும் ஏப்ரல் 29 முதல், 2 வார காலத்துக்கு திரட்ஸ் சேவை துருக்கியில் கிடைக்காது என மெட்டா தெரிவித்துள்ளது. ஆனால், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற மெட்டா நிறுவனத்தின் இதர சேவைகள் எந்த இடையூறும் இன்றி கிடைக்கும் என தெளிவுபடுத்தி உள்ளது. அத்துடன், திரட்ஸ் சேவை நிறுத்தம் தற்காலிகமானது மட்டுமே என்று கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu