கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக உலோக மண்டை ஓடு பொருத்தப்பட்டது.
விபத்து, தலையில் அடிபடுதல் போன்றவற்றால் சில நேரங்களில் மண்டை ஓடு உடைவதுண்டு. மண்டை ஓட்டு சிகிச்சைக்கு ஆபரேசன் செய்து 'பீக்' எனப்படும் பிளாஸ்டிக்கை அதிக வெப்ப நிலையில் உருக்கி தயாரிக்கப்படும் ஒரு விதமான மெட்டீரியலை பொருத்தி வந்தனர். இந்நிலையில் அதற்கு பதிலாக 'டைட்டானியம்' உலோகத்தால் புதிய மெட்டீரியல் தயாரித்து பயன்படுத்தப்படுகிறது. இதை பொருத்த சுமார் ரூ.5 லட்சம் வரை செலவாகிறது.
இதையடுத்து முதல் முறையாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் இந்த நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரது சீரிய முயற்சியால் இந்த சிகிச்சை அரசு ஆஸ்பத்திரியிலும் சாத்தியமாகி உள்ளது. முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சையும் செய்யப்படுவதாக மருத்துவமனை டீன் நாராயணசாமி கூறியுள்ளார்.