பயனர் வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, வாட்ஸ் அப் தளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வாட்ஸ் அப் பிசினஸ் தளத்தில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டு வருவதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
நேற்று பிரேசில் நாட்டில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய மார்க் ஜுக்கர்பெர்க், “வாட்ஸ் அப் பிசினஸ் தளத்தில் இருந்து வருவாயை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் Ad Targeting கொண்டுவரப்படுகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் உள்ள செயல்பாடுகளை போலவே வாட்ஸ் அப் தளத்தில் ஏஐ கருவிகள் செயல்படும். வாடிக்கையாளருக்கு தேவையான விளம்பர செய்திகள் கண்டறிந்து அனுப்பப்படும்.” என்று கூறினார். இது தொடர்பான காணொளியும் திரையிடப்பட்டது.