அமெரிக்கா - கனடா எல்லையில் விழுந்த எரிகல் - கண்டுபிடித்து தருபவர்களுக்கு 25000 டாலர் பரிசு

April 13, 2023

கடந்த வாரம், அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு எல்லை பகுதியில் விண்கல் ஒன்று விழுந்துள்ளது. எரி நட்சத்திரம் அல்லது எரிகல் என்று அழைக்கப்படும் இந்த விண்கல்லின் சிறிய பகுதி காட்டுப்பகுதிக்குள் விழுந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த விண்கல்லை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 25000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Maine அருங்காட்சியகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், “நாசாவின் ரேடார் தகவலின் படி, ஒரு கிலோ கிராமுக்கு அதிகமான எடையுள்ள விண்கல்லின் பகுதி பூமியில் விழுந்துள்ளது. எனவே, […]

கடந்த வாரம், அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு எல்லை பகுதியில் விண்கல் ஒன்று விழுந்துள்ளது. எரி நட்சத்திரம் அல்லது எரிகல் என்று அழைக்கப்படும் இந்த விண்கல்லின் சிறிய பகுதி காட்டுப்பகுதிக்குள் விழுந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த விண்கல்லை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 25000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maine அருங்காட்சியகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், “நாசாவின் ரேடார் தகவலின் படி, ஒரு கிலோ கிராமுக்கு அதிகமான எடையுள்ள விண்கல்லின் பகுதி பூமியில் விழுந்துள்ளது. எனவே, இதனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 25000 டாலர்கள் பரிசு. இதைவிட சிறிய விண்கல் பகுதியை கண்டுபிடித்து தந்தாலும் பரிசு வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான எரி கற்கள் பூமியில் விழுகின்றன. அவற்றில் சில கற்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கற்களின் மூலம், விண்வெளி பொருட்கள் சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu