மகாராஷ்டிராவின் புனேயில் உள்ள MACS அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, இந்தியாவின் முதல் மீத்தேன் உண்ணும் பாக்டீரியாவைக் கண்டறிந்துள்ளனர். மேற்கு இந்தியாவின் நெல் வயல்கள் மற்றும் ஈர நிலங்களில் இந்த மீத்தேன் உண்ணும் பாக்டீரியா, மீத்தனோட்ரோஃப்ஸ் கண்டறியப்பட்டுள்ளது.
மெத்திலோகுகுமிஸ் ஒரைசே என்ற பாக்டீரியா மீத்தேனை ஆக்ஸிஜனேற்றம் செய்வதன் மூலம் காலநிலை சவால்களை சமாளிக்கும் திறன் கொண்டது. இந்த பாக்டீரியா இதுவரை வேறு எங்கும் கண்டறியப்படவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பாக்டீரியா, மீத்தேன் அளவைக் குறைத்து, நெல் விளைச்சலை அதிகரிப்பதாக கூறுகின்றனர். காலநிலை தணித்தலுக்கு இந்த பாக்டீரியாவின் நன்மைகளைப் பயன்படுத்த, மிகுந்த ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக கூறுகின்றனர்.